AMBUR THAGAVAL
Monday, 8 June 2015
Saturday, 6 June 2015
Wednesday, 3 June 2015
'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது!
'மேகி நூடுல்ஸ்' பாதுகாப்பற்றது!
பன்னாட்டு நிறுவனமான, 'நெஸ்லே இந்தியா'வின் பிரபல தயாரிப்பான, 'மேகி நுாடுல்ஸ்'சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக அலுமினியம் கலந்து உள்ளது என, டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், அந்த உணவு பண்டம், சாப்பிட பாதுகாப்பற்றது எனவும், டில்லி ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பல மாநிலங்களில் மேகி நுாடுல்ஸ் உணவு பாக்கெட்டுகள், கடைகளில் ஷோகேஸ்களில் இருந்து இறக்கப்படுகின்றன.பீகாரில், 'மேகி' நுாடுல்ஸ்சை வாங்கி சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலமில்லாமல் போனதை அடுத்து, மேகி நுாடுல்ஸ்சை தயாரிக்கும், 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர், அதன் விளம்பர படத்தில் நடித்த, பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநிலத்தின், முசாபர்பூர் மாவட்ட கோர்ட், போலீசுக்கு நேற்று உத்தரவிட்டது.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, தேவைப்பட்டால், இந்த ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.மேகி நுாடுல்ஸ் உணவு பண்டத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக, எம்.எஸ்.ஜி., எனப்படும், 'மோனோ சோடியம் குளுடமேட்' என்ற ரசாயனம் இருந்தது, உ.பி.,யில் கண்டுபிடிக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம், அதன் விளம்பர படங்களில் நடித்த பாலிவுட் நட்சத்திரங்கள் மூவர் மீது எந்த நேரமும் நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகை, மதுவால் சீரழியும் மாணவர்கள்! கல்வித்துறை நடவடிக்கை அவசியம்
புகை, மதுவால் சீரழியும் மாணவர்கள்! கல்வித்துறை நடவடிக்கை அவசியம்
பள்ளி மாணவர்கள் இடையே சிகரெட், மது, போதை பாக்கு உட்கொள்ளும் தீய பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன; மாணவ சமுதாயத்தை காப்பாற்ற, கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இளம் வயதினர் மத்தியில் புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பாக்கு பயன்படுத்தும் பழக்கம், அதிகரித்து வருகிறது. "டீன் ஏஜ்' வயதில், இதுபோன்ற பழக்கத்துக்கு தள்ளப்படும் மாணவர்கள், எதிர்காலத்தில், அதற்கு நிரந்தர அடிமைகளாகி விடுகின்றனர். படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி விடுகிறது.எதிர்காலம் குறித்த விழிப்புணர்வும், வாழ்க்கையை பற்றிய புரிதலும் இல்லாததே, இதுபோன்ற பழக்கத்துக்கு வழிவகுக்கிறது.
திருப்பூரில், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பலர், பள்ளி அருகே உள்ள கடைகள், சந்து வீதிகள், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்களில் கும்பலாக நின்று கொண்டு, புகைபிடிப்பது, போதை பாக்குகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவிர, பிறந்தநாள், வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் நண்பர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு, "ட்ரீட்' என்ற பெயரில் மது அருந்துவதும், பரவலாக நடக்கிறது. இதுபோன்ற தவறான பழக்கமுள்ள மாணவர்களுடன் சேரும் நல்ல மாணவர்களும், திசைமாறி விடுகின்றனர். கவனம் சிதறி, எதிர்காலத்தை தொலைக்கின்றனர்.
படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், நற்பண்பு மற்றும் நல்ல நடத்தையே பிரதானமாக இருக்க வேண்டும். ஆனால் புகைபிடித்தல், மது அருந்துதல், போதை பாக்கு உட்கொள்ளுதல் போன்றவை பெருகி வருவது, ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. தொழில் நகரான திருப்பூரில், பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களாக இருப்பதால், பிள்ளைகள் மீது கவனம் செலுத்த, போதிய நேரம் இருப்ப தில்லை. இது, பல மாணவர்களுக்கு தவறு செய்ய வசதியாகி விடுகிறது.
மாணவர்கள் மத்தியில் பரவும் தவறான பழக்கங்களை தடுக்க, பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அருகே சிகரெட், போதை பாக்கு விற்பனை கடைகள் இருப்பின், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். ரகசியமாக விற்றால், அக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.மது அருந்தும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு, "கவுன்சிலிங்' தருவது, பெற்றோரை வரவழைத்து எச்சரிப்பது, மது அருந்துவது தொடர்ந்தால், இடைநீக்கம் போன்ற அதிரடி நடவடிக்கைகளையும், கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், மூத்த மாணவர்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைத்து, ரகசிய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். அவ்வப்போது பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த வேண்டும்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இளம் வயதில் சரியான வழிகாட்டுதல் இல்லாததே, இதுபோன்ற சீரழிவுக்கு காரணம். இவ்விஷயத்தில், ஆசிரியர்கள் மட்டுமின்றி, பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும். புகை, மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து, பள்ளியில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம்,' என்றார்.
அறிவியல் கருவிகள்
அறிவியல் கருவிகள்
1. வெப்பத்தை அளக்க - கலோரி மீட்டர்
2. கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாகஅளக்க - குரோனோ மீட்டர்
3. நீருக்கடியில் சப்தத்தை அளவிட - ஹைட்ரோபோன்
4. வெப்பநிலைப்படுத்தி - தெர்மோஸ்டாட்
5. மனித உடலின் உள் உறுப்புகளை காண -எண்டோஸ்கோப்
6. கடல் மட்டத்திலிருந்து உயரம் காண - ஆல்டிமீட்டர்
7.உயர் வெப்பநிலையை அளக்க - பைரோ மீட்டர்
8. மின்னோட்டத்தை அளக்க - அம்மீட்டர்
9. காற்றின் திசைவேகம் காண - அனிமோ மீட்டர்
10. வளிமண்டல அழுத்தம் காண - பாரோ மீட்டர்
11. நீரின் ஆழத்தை அளவிட - ஃபேத்தோ மீட்டர்
12. திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய -ஹைட்ரோ மீட்டர்
13. பாலின் தூய்மையை அறிய - லாக்டோ மாட்டர்
14. சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய - ஓடோமீட்டர்
15. பூகம்ப உக்கிரம் அளக்க - சீஸ்மோ மீட்டர்
16. ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது -ஸ்டிரியோ ஸ்கோப்
17. செவிப்பறையை பரிசோதிக்க - ஓடோஸ்கோப்
18. காகிதத்தின் கனத்தை அளவிட - கார்புரேட்டர்
19. காற்றுடன் பெட்ரோலைக் கலக்க - கார்புரேட்டர்
20. நிறமாலைமானி -ஸ்பெக்ட்ராஸ்கோப்
21. முட்டை குஞ்சு பொறிக்க. இன்குபேட்டர்
22. நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண - ஸ்கோப்ட்ராங்கோ
23. கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட - பிலிம்சால்கோடு
24. மூலக்கூறு அமைப்பை அறிய - எலக்ட்ரான் நுண்ணோக்கி
25. மாலிமிகள் திசை அறிய - காம்பஸ்
26. இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத்தொலைவுகளை அளக்க - செக்ஸ்டாண்ட்
27. தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி- டெலி பிரிண்டர்
28. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது - லெசர்
(LASER )
29. எதிரி விமானத்தை அறிய - ரேடார் (RADER)
30. இருதயத் துடிப்பை அளவிட - E.C.G (ElectroCardio Gram)
31. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க,பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண- ஸ்டெத்தாஸ்கோப்
32. மழையளவை அளக்க - ரெயின் காஜ்
33. இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம்காண - ஸ்டெத்தாஸ்கோப்
34. நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க -மைக்ரோஸ்கோப்
35. தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க -பைனாகுலர், டெலஸ்கோப்
36. சமபரப்பை அளக்க உதவும் கருவி - ஸ்பிரிட்லெவல்
37. காந்தப் புலங்களை அறிய - மாக்னடோ மீட்டர்
38. இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய
- ஹிமோசைட்டோ மீட்டர்
39. நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட -கானாங்கின் போட்டோ மீட்டர்
40. ஒளிவிலகல் எண்ணை அளக்க - ஸ்பெக்ட்ரோமீட்டர்
41. மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி -ஸ்பெக்ட்ரோஸ்கோப்
42. கோளக வடிவப் பொருட்களின் வளைவினைஅளக்க -ஸ்பியரோ மீட்டர்
43. மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையைஅறிய - பைரோ மீட்டர்
44. உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட -தெர்மோமீட்டர்
45. திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும்கருவி - பைக்கோமீட்டர்
46. படிகங்களின் கோணங்களை அளக்க - கோனியோமீட்டர்
47. ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவைஅளக்க - ஆல்கஹாலோ மீட்டர்
48. ஒளியின் அளவை அறிய போட்டோ மீட்டர்
49. நீராவி அழுத்தத்தை அளக்க - மானோ மீட்டர்
50. சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க -கால்வனா மீட்டர்
51. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட்மீட்டர்
52. கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்
53. விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோமீட்டர்
54. கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்
55. இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோமீட்டர
தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள் கல்வி மறுக்க படுவதன் உண்மை நிலை !!!!!!
தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள் கல்வி மறுக்க படுவதன் உண்மை நிலை !!!!!!
இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோகளே சிரிதுசிந்தியுங்கள் !!!
உங்கள் மகன் & மகள் மழலை பள்ளி
சேர்க்கும் செலவு குறைந்த பட்சம்
இன்றைய கல்வி வியாபார விலை
:15000.00
அடுத்த நிலை 1 ஆம் வகுப்பு விலை
:25000.00
அடுத்த நிலை 2 ஆம் வகுப்பு
விலை:35000.00
அடுத்த நிலை 3 ஆம் வகுப்பு
விலை:37000.00
அடுத்த நிலை 4 ஆம் வகுப்பு
விலை:45000.00
அடுத்த நிலை5 ஆம் வகுப்பு விலை
:50000.00
அடுத்த நிலை 6 ஆம் வகுப்பு
விலை:65000.00
அடுத்த நிலை7ஆம் வகுப்பு விலை
:78000.00
அடுத்த நிலை 8 ஆம் வகுப்பு
விலை:85000.00
அடுத்த நிலை9 ஆம் வகுப்பு விலை
:95000.00
அடுத்த நிலை10ஆம் வகுப்பு
விலை;150000.00
அடுத்த நிலை 11ஆம் வகுப்பு
விலை:200000.00
அடுத்த நிலை 12 ஆம் வகுப்பு
விலை:300000.00
உங்கள் மகனோ மகளோ பள்ளிபடிப்பை
முடிக்க குறைந்த பட்சம் நீங்கள்
பண்ணும் செலவு 11.80 லட்சம்
தனியாரிடம் தாரை வார்குரிங்க
எதற்காக இந்த இழப்பு ???
அரசு பள்ளியை நம்பாததன்
விளைவு அரசுப்பள்ளியில் இதே
படிப்பை உங்கள் மகனோ மகளோ
படித்தால் நீங்கள் இழக்கும் பணம்
எவளவு ?
வருமானம் மட்டும்தான் எவளவும்
சத்துணவு முதல் சைக்கில் &
மடிகணணி செருப்பு சீருடை
பேருந்து கட்டணம் என 11.80
லட்சங்களை மிச்ச படுத்த முடியும்
உங்கள் மகனோ மகளோ பள்ளி
படிப்பை முடித்தால் தனியார் கல்வி
நிறுவனத்தை நடத்தும்
வியாபாரிகளிடம் இழக்கும் 11.80
லட்சம் முதலிஈடில் ஒரு தொழிலை
தொடங்கி உங்கள் மகனை மகளை
முதலாளியாக்கி நாட்டையும்
வல்லரசாக முடியும் சிந்தியுங்கள்
மக்களே சிந்திக்கும் திறனை இழந்த
தமிழக மக்களே இந்த வருடம் சாதனை
புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை
10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு
இரண்டிலும் மொத்தம் மாநில
அளவில் முதல் முன்று இடங்களை
பிடித்த தனியார் கல்வி நிலைய
மாணவர் எண்ணிக்கை 1362 அரசு
பள்ளிகளில் படித்த மாணவர்களின்
எண்ணிக்கை 483 ஆகா அரசு
பள்ளியை தரம் உயர்த்த
பெற்றோர்களாகிய நாம்
நினைத்தால் நிச்சயம் முடியும்
உங்கள் கவுரவத்தால் நீங்கள் 11.80
லச்சத்தை தனியாரிடம் இழக்க
நேரிடுகிறது உங்கள் மகனை அரசு
பள்ளியில் சேர்த்து அந்த பள்ளிக்கு
வருடம் 2 ஆயிரம் மட்டும் செலவு
செய்தால் நமது மக்களின்
பொருளாதார நிலை கல்வி நிலை
மாற வாய்ப்பு அதிகம்.....
இந்த கட்டுரை அணைத்து
பெற்றோர்களையும் சென்றடைய
அதிகம் பகிருங்கள் அன்பு
உறவுகளே
நண்பர் தகவல் .
பகிர்வு :
கே.இராஜகோபால் தருமபுரி